79வது கேன்ஸ் திரைப்பட விழா கோலாகலமாக நிறைவடைந்த நிலையில், அதன் நிறைவு விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பல ஆண்டுகளாக கேன்ஸ் விழாவின் முக்கிய முகமாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராய், இந்த முறையும் தனது பிரமாண்டமான தோற்றத்தின் மூலம் ரசிகர்களையும், ஃபேஷன் உலகினரையும் கவர்ந்துள்ளார்.
இந்த இறுதி நிகழ்ச்சிக்காக அவர் நீலம் மற்றும் வெள்ளை நிற கலவையில் வடிவமைக்கப்பட்ட உயர்தர ஆடையை அணிந்து தோன்றினார். சீன ஆடை வடிவமைப்பாளர் செனி சான் வடிவமைத்த டக்ஸிடோ பாணியிலான அந்த ஆடை, அலங்கரிக்கப்பட்ட லேப்பல்கள் மற்றும் பேடட் தோள் வடிவமைப்புகளுடன் மிகவும் கம்பீரமாக அமைந்திருந்தது. அந்த உடை அலங்காரம் ஐஸ்வர்யா ராயின் அழகையும், நேர்த்தியையும் மேலும் உயர்த்திக் காட்டியது.
கேன்ஸ் 2026 சிவப்பு கம்பள நிகழ்வுகளில் அதிகம் பேசப்பட்ட தோற்றங்களில் ஒன்றாக ஐஸ்வர்யா ராயின் இந்த லுக் தற்போது மாறியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அவரது புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
