‘டியூன்’ திரைப்பட வரிசையின் மூன்றாவது மற்றும் இறுதிப் பாகத்தை இயக்குநர் டெனிஸ் வில்லெனுவ் இயக்கியுள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மூன்று பாகங்களுக்கும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார். இவர் இந்தியாவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் முதல் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது ‘டியூன் 3’ படத்தின் இரண்டாவது மற்றும் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது. விண்வெளி சாம்ராஜ்ஜியங்களுக்கு இடையிலான போர், பிரம்மாண்டமான பாலைவன உயிரினங்கள், உணர்வுப்பூர்வமான காட்சிகள் எனப் பல அம்சங்கள் டிரெய்லரில் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
Add a Comment
