இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி நடிப்பில் உருவான ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நீண்ட காலமாக வெளியீட்டுக்காகக் காத்திருந்தது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே படமாக்கப்பட்ட இப்படம், பல்வேறு காரணங்களால் இதுவரை ரசிகர்களைச் சென்றடையாமல் இருந்தது.
தற்போது இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்குப் பதிலாக நேரடியாக ஓடிடியில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, படத்தின் புதிய டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. காதலை மையமாகக் கொண்டு நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கலந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
