ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாஸ்ட்’ (Blast). இந்த படத்தில் அபிராமி மற்றும் பிரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குநரான சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ளார். இவர் நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், பிரதீப் E. ராகவ் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
சமீபத்தில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் 28ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
