ரிலீஸ்க்கு தயாரானதா ஜனநாயகன் ? வெளியான புதிய அப்டேட்?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆரம்பத்தில் பொங்கல் வெளியீடாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை தொடர்பான சில சிக்கல்கள் காரணமாக படத்தின் ரிலீஸ் தாமதமானதாக கூறப்படுகிறது. இதுவரை திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றன. தணிக்கை அனுமதி கிடைக்காத காரணத்தால், படத்தை வெளியிடும் திட்டத்தை தயாரிப்பு நிறுவனம் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே சமயம், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தை வெளியிடும் முயற்சியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால், அதற்கு முன்பாக ஜூன் 19ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிடலாம் என படக்குழு ஆலோசித்து வருவதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டால், விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய இரட்டை கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading