‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மீரா கதிரவன், தற்போது ‘ஹபீபி’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். இஸ்லாமிய குடும்ப பின்னணியையும், காதல் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் கஸ்தூரிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் புதுமுக நடிகர், நடிகைகள் ஜோடியாக அறிமுகமாகியுள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டிலேயே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு கவனம் பெற்றிருந்தது. தற்போது திரைப்படம் முழுமையாக தயாராகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில், ‘ஹபீபி’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, வருகிற மே 28ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இஸ்லாமிய காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
