ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார்!

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப். காமெடியான வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். ஆறரரை அடி உயரம் 150 கிலோ எடை கொண்ட இவர் திரையில் வந்தாலே மிரட்டலாக இருக்கும். அவருக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருந்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.1988ம் ஆண்டு வெளியான ‘பிளட்ஸ்போர்ட்’ என்ற தற்காப்பு கலை படம் அவருக்கு உலக புகழ் பெற்றுத் தந்தது. இதில் இவரது நகைச்சுவை கலந்த முரட்டுத் தனமான நடிப்பு வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘ரிவெஞ்ச் ஆப் தி நெர்ட்ஸ்’, ‘மேஜிக் கிட் 2’, ‘ஹை வோல்டேஜ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. அவர் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading