முதல்வர் விஜய்யிடம் தனது மனைவியின் சிகிச்சைகாக கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் முத்துக்காளை. இவர் நடிகர்கள் விஜய், அஜித் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.குறிப்பாக வடிவேலுவுடன் முத்துக்காளை இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடிகர் முத்துக்காளையின் மனைவி மாதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நோய் தொற்று காரணமாக கடந்த 17 நாட்களாக மூச்சு விட சிரமப்பட்டு வருகிறாராம். இதனால் தனது மனைவிக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க உதவுமாறு முதலமைச்சருக்கு முத்துக்காளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading