’29’ படத்தின் ‘மேன்சன் குத்து’ வீடியோ பாடல் வெளியீடு!

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’, லோகேஷ் கனகராஜின் ‘ஜி-ஸ்குவாட்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ’29’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக ‘ரெட்ரோ’ படத்தில் வில்லனாக நடித்த விது நடித்துள்ளார். கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.’29’ படம் கடந்த 8ம் தேதி வெளியானது. இப்படம் முதல் வாரத்தில் ரூ1.70 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிக்கும் ’29’ படத்தின் ‘மேன்சன் குத்து’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார். பாடல் வரிகளை பாக்கியம் சங்கர் எழுதியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading