பாலிவுட்டில் ‘பிரம்மாஸ்திரம் பார்ட் 1: சிவா’, ‘வாலே’, ‘பிளாக் அவுட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மவுனி ராய். தற்போது தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகை திரிஷா நடித்துள்ள ‘விஸ்வாம்பரா’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். நடிகை மவுனி ராய், கடந்த 2022ஆம் ஆண்டு சூரஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மவுனி ராய் மற்றும் அவரது கணவர் சூரஜ் நம்பியார் இருவரும் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதை திடீரென நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக பாலிவுட் ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து நடிகை மவுனி ராய் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட வேண்டாம். எங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கு சுதந்திரம் வழங்குங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், விவாகரத்து தொடர்பான தகவல்களை அவர் நேரடியாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
