சிறிய இடைவெளிக்கு பிறகு கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் நடிகை அபர்ணா தாஸ்!

மலையாள திரைப்படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ், நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு வெளியான ‘டாடா’ திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பையும் பரவலான கவனத்தையும் பெற்றுத் தந்தது. அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தொடர்ந்து தமிழில் அதிக வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இதற்கிடையில் தெலுங்கில் வெளியான ‘ஆதிகேசவா’ திரைப்படத்தில் நடித்தார். அந்த படம் வணிகரீதியாக நல்ல வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, மலையாளத் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அபர்ணா தாஸ் மீண்டும் தமிழ்த் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். தற்போது நடிகர் சந்தானத்துடன் இணைந்து ‘லவ் பைட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். திருமணத்திற்குப் பிறகு தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட அபர்ணா, திருமணத்திற்குப் பின்னர் சினிமாவிலிருந்து விலகி வேறு வாழ்க்கைத் திட்டத்தை அமைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி, எம்பிஏ படித்துள்ள அபர்ணா தாஸ், தனது கணவருடன் துபாயில் குடியேறி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக பணியில் சேர திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது மீண்டும் திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், தனது அந்த முடிவை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் மலையாளத்தில் ‘ரிட்டன், டைரக்ட் பை காட்’ என்ற திரைப்படத்திலும் அவர் தற்போது நடித்து வருகிறார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading