கார்த்தியை இயக்கும் பிரபல டோலிவுட் இயக்குனர் கல்யாண் சங்கர்? வெளியான புது தகவல்!

‘டானாக்காரன்’ திரைப்படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘மார்ஷல்’ படத்தில் நடிகர் கார்த்தி தற்போது நடித்து வருகிறார். 1960-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், காலப்பின்னணி மற்றும் கதைக்களம் காரணமாக ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவருகிறார். மேலும், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, ஈஸ்வரி ராவ், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். படத்தின் கலை வடிவமைப்பு மற்றும் காலத்திற்கேற்ற காட்சியமைப்புகளுக்காக படக்குழு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பை கார்த்தி சமீபத்தில் நிறைவு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கும் புதிய திரைப்படத்திலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘மேட்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற கல்யாண் சங்கர் இயக்கும் இந்த புதிய படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துவருகிறார். மேலும், நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம், கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading