Advertisement

‘ஜெயிலர் 2’ உருவானது எப்படி? ரஜினிகாந்த் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்! #Jailer 2 Super Show

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இப்படத்தின் ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், இரண்டாம் பாகம் உருவான விதம், படத்தில் நடித்தது குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். வழக்கமான இசை வெளியீட்டு விழாவுக்குப் பதிலாக வித்தியாசமான நிகழ்ச்சியைத் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ரசிகர்களை நேரடியாகச் சந்திக்க முடியாததில் தனக்கும் வருத்தம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுவாக இரண்டாம் பாகங்களில் எனக்கு பெரிதாக உடன்பாடில்லை. கதையின் புதுமையும் படைப்பாற்றலும் குறைந்துவிடும் என்ற எண்ணம் தனக்கு இருப்பதாகக் கூறிய ரஜினிகாந்த், அதனால்தான் ‘பாட்ஷா பட இரண்டாம் பாகம், குறிப்பாக பாட்ஷா மறைந்து வாழ்ந்து வருவது போன்ற கதையை ஆர்.எம். வீரப்பன் அவர்களே தயார் செய்து கொண்டு வந்தார், அதேபோல் கார்த்தி சுப்புராஜ் ‘பேட்ட 2’ படத்திற்காக விஜய் சேதுபதி திரும்பவும் வந்து பழி வாங்குவது போன்ற கதையை என்னிடம் கொண்டு வந்தார். இருந்தாலும் இந்த படங்களில் நடிக்கவில்லை என்றார். ஆனால், ‘ஜெயிலர்’ படத்தை மீண்டும் பார்த்தபோது, வர்மா கதாபாத்திரத்தின் பின்னணியில் சர்வதேச அளவிலான பெரிய குழு இருப்பதும், ஜெயிலர் கைப்பற்றிய மதிப்புமிக்க பொருட்களும் இரண்டாம் பாகத்திற்கான வலுவான கதைக்களத்தை உருவாக்குவதை உணர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சனுக்கு இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து வாய்ப்புகள் வந்ததாக ரஜினிகாந்த் கூறினார். இதையடுத்து நெல்சனிடம் ‘ஜெயிலர் 2’ குறித்து பேசியதாகவும், முதலில் யோசித்த நெல்சன் பின்னர் புதிய கதையை உருவாக்க நீண்ட காலம் உழைத்ததாகவும் தெரிவித்தார். முதல் பாகத்தைவிடச் சிறப்பாகப் படத்தை உருவாக்க வேண்டும் என்ற சவாலை நெல்சன் சிறப்பாகக் கையாண்டுள்ளதாகவும் பாராட்டினார்.

ஜெயிலர் 2 படத்தில் சுராஜூடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், மிதுன் சக்கரவர்த்தி முதலில் நடிக்க மறுத்துவிட்டு, பின்னர் தன்னை அடிக்கவோ சுடவோ கூடாது என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டதாகவும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். ரம்யா கிருஷ்ணன் 2வது பாகத்திலும் சிறப்பாக நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையும் வித்யா பாலனின் திறமையையும் பாராட்டிய அவர், யோகி பாபு மற்றும் நமோ நாராயணாவுக்கும் இப்படத்தில் முக்கியத்துவம் இருப்பதாகக் கூறினார்.

அனிருத் இசையமைததது குறித்துப் பேசிய ரஜினிகாந்த், கான்செர்ட் , பாரடைஸ் படம் என மற்ற பணிகளில் அவர் பிஸியாக இருந்ததால் இசைப் பணிகளை முடிப்பாரா என்ற பதற்றம் இருந்ததாகவும், இறுதியில் சிறப்பான பாடல்களைக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தமன்னாவைப் பாடல்களில் இடம்பெறச் செய்யலாம் எனத் தான் கூறியபோது, உங்களுக்காக வைக்க முடியாது சார் என்று நெல்சன் கூறினார். நான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்றேன் என நகைச்சுவையாக கூறினார்.. இறுதியாக, 76 வயதிலும் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள் அதற்கு, எனது ரசிகர்கள்தான் காரணம் என்றும், அவர்களே தன்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்றும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply