‘பரிமளா & கோ’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு…எகிறும் எதிர்பார்ப்பு!

‘பசங்க’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ், அதன் பின்னர் ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை உருவாக்கினார். குடும்பம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை கலந்த கதைகளை எளிமையாக சொல்லும் திறமையால் ரசிகர்களின் பாராட்டை தொடர்ந்து பெற்று வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘தலைவன் தலைவி’ திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.100 கோடி வசூலை கடந்ததாக கூறப்படுகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு தற்போது அவர் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘பரிமளா & கோ’. இந்த திரைப்படம் நகைச்சுவை கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஜெயராம், நடிகை ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியார்ஜி சி வில்லியம்ஸ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். குடும்பம் மற்றும் நகைச்சுவையை இணைக்கும் விதமாக படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ஜெயராம், மிஷ்கின், சாண்டி, யோகி பாபு உள்ளிட்டோர் நிறைவு செய்துள்ளனர். அதற்கான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது கூடுதல் ஆர்வம் உருவாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading