Advertisement

உருவக்கேலிக்கு அஞ்சியிருந்தால் முன்னேறியிருக்க முடியாது – கத்ரீனா கைஃப்!

தனது உடல் தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் எழுந்த கேலி விமர்சனங்கள் தன்னை முடக்கிவிடவில்லை என்று நடிகை கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உருவக்கேலிக்கு உள்ளானது. இதற்கு நடிகைகள் ரம்யா, குஷ்பு சுந்தர், திவ்யா ஸ்பந்தனா, சமீரா ரெட்டி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கத்ரீனாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய கத்ரீனா கைஃப், தனது தோற்றம் தொடர்பான எதிர்மறையான கருத்துகளைக் கருத்தில் கொண்டு தனது செயல்பாடுகளை மாற்றியிருந்தால், பயத்தால் முடங்கியிருப்பேன் என்று தெரிவித்தார். அப்படிச் செய்திருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போயிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சில நேரங்களில் மற்றவர்கள் நம்மைப் பாராட்டுவார்கள்; சில நேரங்களில் நம்மை நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறிய அவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் ஒருவரின் சுயமதிப்பைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினார். உருவக்கேலி தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் கத்ரீனா கைஃப் தெரிவித்துள்ள இந்தக் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

Add a Comment

Leave a Reply