Advertisement

நடத்துநர் வேலையை இன்றும் மிஸ் செய்கிறேன்! – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி! #Jailer2 Super Show

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு பங்கேற்ற ஜெயிலர் 2 சூப்பர் ஷோ என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, எப்போதும் பணிவுடன் இருப்பதற்கான காரணம் குறித்து நெல்சன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், சினிமாவை மிகவும் நேசித்தாலும், அதற்கு முன்பு தான் பார்த்த நடத்துநர் வேலையின் மீது அதிகப் பாசம் கொண்டிருந்ததாகக் கூறினார். ஐந்து ஆண்டுகள் பேருந்து நடத்துநராகப் பணியாற்றிய நாட்களை இன்றும் மிஸ் செய்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனது மனதில் தான் ஒரு நடத்துநர் என்ற அடையாளமே ஆழமாகப் பதிந்திருப்பதாகக் கூறிய அவர், பெங்களூருவுக்குச் செல்லும்போதெல்லாம் பழைய பேருந்தையும் காக்கி உடையையும் பார்க்கும்போது தனி ஈர்ப்பு ஏற்படுவதாகப் பகிர்ந்துகொண்டார். ஒரு பேருந்து நடத்துநர் மற்றவர்களிடம் எவ்வாறு பணிவுடன் நடந்துகொள்வாரோ, அதுவே தனது இயல்பான அணுகுமுறைக்குக் காரணம் என்றும் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply