விஜய்யின் வெற்றி ஒரு சாதாரண வெற்றி அல்ல…வரலாற்றில் இடம் பெறும் மிகப்பெரிய வெற்றி… இயக்குனர் எஸ்ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி!

நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், யாராலும் முன்கூட்டியே எதிர்பார்க்கப்படாத வகையில், தனது முதல் தேர்தலிலேயே நடிகரும் தவெக தலைவருமான விஜய் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளார். அவரது கட்சி 100க்கும் அதிகமான தொகுதிகளில் தவெக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முழுமையான பெரும்பான்மையைப் பெற இன்னும் சில இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இந்நிலையில் தவெக முழுமையான பெரும்பான்மை எட்டப்படவில்லை என்றாலும், பிற கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்த சூழலில், விஜய்க்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டியில், “ஒரு தந்தையாக நான் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என் மகனுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தின் முதலமைச்சராக நான் வருவேன் என்ற அவரது தன்னம்பிக்கையும் உறுதியும் மிகத் தெளிவாக வெளிப்பட்டன. அந்த மனநிலையை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

ஒரு தலைவராக, எந்த கூட்டணியையும் சாராமல் தனித்து நின்று சாதிக்க வேண்டும் என்ற அவரது துணிச்சல் பாராட்டத்தக்கது. இது ஒரு சாதாரண வெற்றி அல்ல; வரலாற்றில் இடம் பெறும் மிகப்பெரிய வெற்றி. விஜயின் அரசியல் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகவும், சரித்திர சாதனையாகவும் நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading