சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ்… பிறந்தநாளன்று வெளியான ஸ்பெஷல் போஸ்டர்!

நடிகை ராதிகாவை மையமாகக் கொண்டு ‘தாய் கிழவி’ என்ற திரைப்படத்தை இயக்கி, தனது முதல் படத்திலேயே வெற்றியைப் பெற்றவர் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது சிவகார்த்திகேயனை நாயகனாகக் கொண்டு ‘சேயோன்’ என்ற புதிய திரைப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்து வருகிறது. மதுரை பகுதியை அடிப்படையாகக் கொண்டு, கிராமப்புற சூழலும் அங்கு வழிபடப்படும் தெய்வங்களையும் மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் இந்த படத்தில் இணைந்திருப்பதை படக்குழுவினர் வாழ்த்து போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் பாக்யஸ்ரீ நேரடி தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading