தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இரவு 10 மணி நிலவரப்படி தவெக – 107, திமுக – 73, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆட்சியமைக்க 118 தொகுதிகள் பெரும்பான்மை தேவை. முதல் தேர்தலிலேயே தவெக மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் 1,12,127 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 73,044 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, அஜித், சிம்பு, ஹரிஷ் கல்யாண், ஆர்யா, சந்தானு, ராஜ்குமார் பெரியசாமி, ராம்சரண், மகேஷ் பாபு, நானி, ரவி தேஜா, கார்த்தி, விஷ்ணு விஷால், சதீஷ், அட்லி, வெங்கட்பிரபு, என பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
