சல்மான்கான் – நயன்தாரா நடிக்கும் படத்திற்கு நான்கு இசையமைப்பாளர்களா? உலாவும் புது தகவல்!

பிரபல நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர்கள் குறித்து சமீபத்தில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தில் ராஜூ தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பை நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சல்மான் கான் கடைசியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதனால், தற்போது உருவாகி வரும் இந்த புதிய திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு இசையமைப்பாளர் அல்லாமல் மொத்தம் நான்கு இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் இசை அமைப்பில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஈதுபெருநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading