ரூட் கிளியர்? விரைவில் வெளியாகிறதா ஜனநாயகன் திரைப்படம்?

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று, தனித்த பெரும் கட்சியாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. விஜய் கடைசியாக நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டது.

ஆனால், அந்த திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் காலமுறைப்படி வழங்கப்படவில்லை. இதனால், படத்தை மறுபரிசீலனைக்குழு பரிசோதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது; உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு இறுதியில் வாபஸ் பெறப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக மறுபரிசீலனைக்குழு படத்தை பார்த்தபோதும், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. அதற்கிடையில் தேர்தல் நடைபெறுவதும் காரணமாகக் கூறி சான்றிதழ் வழங்காமல் தாமதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில், நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, விஜய் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதியாகியுள்ளது. இதனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் தலைப்புக் கார்டில் ரசிகர்கள் விருப்பப்படி ‘தமிழக முதல்வர் விஜய்’ என்ற குறிப்பை இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading