ஜெய் நடித்துள்ள ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

பிரபல இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் அவர்களிடம் ‘சர்கார்’ மற்றும் ‘தர்பார்’ திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய பாபு விஜய், தற்போது ஜெய் நடிப்பில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாபு விஜய் தயாரித்து இயக்கும் இந்த திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “அக்கடி கொழுத்து பக்கடி” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவியது. அந்த பாடலை தேவா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியை ஏ. ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading