தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மேக்னா ராஜ், அதன் பின்னர் மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகிற்கு திரும்பிய மேக்னா ராஜ், தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பகிர்ந்துள்ள பதிவில், என் கணவர் சிரஞ்சீவி சார்ஜா, ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர். எப்படியாவது அவரது படத்தில் நடித்துவிட வேண்டும் என்பது எங்கள் இருவரின் கனவாக இருந்தது. இன்று எங்கள் எட்டாவது திருமண நாள். இந்த நாளில், நாங்கள் மனதில் வைத்திருந்த அந்த கனவு நிறைவேறிய தருணத்தை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது என் திரையுலக வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த சாதனை உங்களால் தான் சாத்தியமானது” என்று தனது கணவரை நினைவுகூர்ந்து உருக்கமாக தெரிவித்துள்ளார்.
