‘கான் சிட்டி’ படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்… அர்ஜுன் தாஸின் வளர்ச்சி மகிழ்ச்சி என நெகிழ்ச்சி!

மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் அர்ஜுன் தாஸ், தற்போது கதாநாயகனாகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களிலும் பிஸியாக இயங்கி வரும் அவர், சமீபத்தில் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் வெளியான கான் சிட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

கடந்த மாதம் 26-ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏமாற்றாதே, ஏமாறாதே என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் அன்னா பென், வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இப்போதுதான் கான் சிட்டி திரைப்படத்தை பார்த்தேன். கைதி படத்தில் இருந்த காலத்திலிருந்து இன்று வரை அர்ஜுன் தாஸின் வளர்ச்சியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அர்ஜுன் மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையரங்கில் மனம் விட்டு சிரித்த அனுபவம் கிடைத்தது. குறிப்பாக வடிவுக்கரசி, யோகி பாபு, ஆனந்தம் ஆகியோரின் நடிப்பு மிகவும் ரசிக்க வைத்தது. அனைவரும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து படக்குழுவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading