NEEK பட கதாநாயகன் பவிஷ், கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ், கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, தனுஷ் இயக்கத்தில் உருவான ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் படத்திற்கு ‘லவ் ஓ லவ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

‘போகன்’ திரைப்பட இயக்குநர் லக்ஷ்மனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் தெலுங்கு இணையதளப் பிரபலமான நாக துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சென்னை மற்றும் உதகை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் தெரிவித்துள்ளது. இளம் தலைமுறையினரை கவரும் வகையில் காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading