மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம்-3’ படத்தின் டீஸர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்த ‘திரிஷ்யம்’ திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. சுமார் 5 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த திரைப்படம், உலகளவில் 75 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் இந்த படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் மீண்டும் உருவாக்கப்பட்டது. அதேபோல் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சீன மொழிகளிலும் இந்த படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ‘திரிஷ்யம் 2’ வெளியானது. இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானாலும், முதல் பாகம் போலவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில் ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. மேலும், ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் வருகிற மே 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading