தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் அஜித் குமார் கார் பந்தய வீரராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியையும் தொடங்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட பல சர்வதேச நகரங்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளது. தொடர்ந்து பல முக்கியமான ரேசிங் தொடர்களிலும் அஜித்குமார் அணியின் பங்கேற்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பிரான்சில் நடைபெற உள்ள Michelin Le Mans Cup போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக, அஜித்குமார் ட்ராக்கை நேரில் சென்று ஆய்வு செய்த வீடியோ வெளியாகியுள்ளது. சர்வதேச மோட்டார் விளையாட்டுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டி மே 2ஆம் தேதி Circuit Paul Ricard வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் அஜித் ‘Ajith Redant Racing’ அணியின் சார்பில் இரண்டு முக்கிய கார்கள் பங்கேற்க உள்ளன. இதனால் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. போட்டிக்கு முன்னதாக அவர் ட்ராக்கை ஆய்வு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
—
