மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் தமிழில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து நடித்து பிரபலமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’, ‘கூலி’, ‘ஜனநாயகன்’ போன்ற படங்களில் நடித்த பூஜா ஹெக்டே தற்போது ‘காஞ்சனா 4’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் ஊடகங்களில் நடிகர் ரோஹன் வினோத் மெஹராவுடன் பூஜா ஹெக்டே காதலில் இருப்பதாகவும், இருவரும் அடிக்கடி சந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த காதல் குறித்த தகவல்களுக்கு இதுவரை பூஜா ஹெக்டே எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை. நடிகர் ரோஹன் வினோத் மெஹரா ஹிந்தி திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
—
