திரையுலகில் கடைசியாக கூட உதவி கேட்க நினைக்காத நபர் இவர்தான்… பிரீத்தி ஜிந்தா OPEN TALK!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராகத் திகழும் பிரீத்தி ஜிந்தா, ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை சமீபத்திய நேர்காணலில் பகிர்ந்து கொண்டு கவனத்தை ஈர்த்துள்ளார். குறிப்பாக, அவசரமான அல்லது ஆபத்தான சூழ்நிலைகளில் தாம் ஒருபோதும் உதவி கேட்க விரும்பாத நபர் நடிகர் சைப் அலிகான் தான் என்று அவர் வெளிப்படையாக தெரிவித்தார். இந்த சம்பவத்தை அவர் ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நினைவுகூர்ந்தார். 2004ஆம் ஆண்டு ஆசிய நாடுகளை தாக்கிய சுனாமி பேரழிவின்போது, பிரீத்தி ஜிந்தா தனது நண்பர்களுடன் தாய்லாந்தின் Phuket பகுதியில் விடுமுறை கழித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தலான சூழ்நிலையை அவர் விவரித்தார்.

அப்போது சைப் அலிகான் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி தான் இந்த நினைவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் கூறினார். அவர் சொல்வதாவது, “சுனாமி காரணமாக அங்கு சிக்கிக் கொண்டு தவித்துக் கொண்டிருந்த சமயத்தில், சைப் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் ‘ஹே பிரீத்தி ஜிந்தா, நீங்க தண்ணீருக்குள் இருக்கீங்களா என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த தருணத்தில், ‘இவர் எப்படி இப்படிப்பட்ட கேள்வி கேட்கிறார்?’ என்று நான் எண்ணினேன். அதனால் தான், நான் கடத்தப்பட்டாலோ அல்லது ஏதாவது ஆபத்தில் சிக்கினாலோ கூட, திரையுலகில் கடைசியாக உதவி கேட்க நினைக்காத நபர் சைப் அலிகான் தான்” என்று சிரித்தபடியே கூறினார்.

மேலும், பிரீத்தி ஜிந்தா மற்றும் சைப் அலிகான் இருவரும் Kal Ho Naa Ho மற்றும் Salaam Namaste போன்ற வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பிரீத்தி ஜிந்தா மீண்டும் திரையுலகில் நடிப்பைத் தொடங்கியுள்ளார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கத்தில் உருவாகி வரும் Lahore 1947 திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஷபானா ஆஸ்மி மற்றும் அலி பசல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading