தவெக தலைவர் விஜய் நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை பகிர்ந்த இசைஞானி இளையராஜா!

தவெக தலைவர் விஜய் நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிட்டுள்ள நிலையில், அவருக்கு திரைத்துறையினரிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்த சூழலில், விஜய் தனது சிறுவயதில் நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கிறது’ என்ற பாடலை இளையராஜா பகிர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ராதிகா, ராம்கி, நிழல்கள் ரவி மற்றும் குழந்தை நட்சத்திரமாக விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த நேரத்தில், அந்த பாடலின் வரிகளும் தற்போதைய அரசியல் சூழலுடனும் இணைந்து பார்க்கப்படுகின்றன. இதனால், இளையராஜா விஜய்யின் அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா என்ற கேள்வியும் இணையத்தில் விவாதமாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading