ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மயா ரவி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கருப்பு’ திரைப்படம் வருகிற 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், படக்குழு தீவிரமான விளம்பர பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், சமீபத்திய ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, தணிக்கை குழு வழங்கிய பரிந்துரைகள் குறித்து விரிவாக பேசினார்.
அவர் கூறுகையில், “படம் தணிக்கை குழுவிடம் சென்றபோது, எனக்கு மிகவும் பிடித்திருந்த சில காட்சிகளை மாற்ற வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர். இரண்டு ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய இந்தப் படத்தில் திடீரென மாற்றங்கள் செய்ய வேண்டுமென கூறியதை உடனடியாக ஏற்றுக்கொள்வது எளிதாக இல்லை. இருப்பினும் பின்னர் ஆலோசித்து, தேவையான திருத்தங்களை செய்தோம். தற்போது படம் நாங்கள் நினைத்தபடியே சிறப்பாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
—
