துல்கர் சல்மானை நேரில் சந்திக்கவே திரைத்துறைக்கு வந்தேன்… நடிகை பரியா அப்துல்லா!

தெலுங்கு திரையுலகில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘ஜதி ரத்னலு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பரியா அப்துல்லா. அதன் பின்னர் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள ‘காயப்பட்ட சிங்கம்’ என்ற திரைப்படத்தின் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தில் இயக்குநர் தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் துல்கர் சல்மான் கலந்து கொண்டதுடன், பரியா அப்துல்லாவும் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய பரியா அப்துல்லா, துல்கர் சல்மானை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஒரே ஆசையாலேயே தான் சினிமா துறையில் காலடி வைத்தேன் என்று தனது அபிமானத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் முதன்முதலில் பார்த்த துல்கர் சல்மான் படம் ‘சார்லி’. அந்த படத்தை பார்த்தபோது, அதில் கதாநாயகியாக நான் என்னையே கற்பனை செய்து கொண்டேன். அதன் பிறகு சினிமா துறையில் நுழைந்து எப்படியாவது அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது. எனது முதல் படமான ‘ஜதி ரத்னலு’ வெளியான போது அதன் டீசரை துல்கர் சல்மானுக்கு டேக் செய்தேன். அவர் அதற்கு பதில் அளித்ததை பார்த்ததும் மகிழ்ச்சியில் என்னுடைய மொபைலை மேலே தூக்கி எறிந்தேன். தற்போது அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் அவருடன் நானும் இருப்பது எனக்கு நம்ப முடியாத மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading