இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ரீலீலா, தனது வேகமான நடனத்திற்கும் பிரபலமானவர். சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தற்போது தனுஷ் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இதுவரை காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படங்களில் அதிகமாக நடித்துவரும் ஸ்ரீலீலா, குடும்பத்தை மையமாகக் கொண்ட பொழுதுபோக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “உணர்ச்சி மிக்க காட்சிகள் நிறைந்த குடும்பக் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அத்தகைய கதாபாத்திரம் என் நடிப்பில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என நம்புகிறேன்.
அதேபோன்று, வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களிலும் நடிக்க விருப்பம் உள்ளது. அப்படிப்பட்ட கதைகள் தான் என்னை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலீலா.
—
