நான் முதலில் பெற்ற சம்பளம் 500 ரூபாய்… நடிகை சமந்தா OPEN TALK!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராஜ் நிடிமொருவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

நேற்று தனது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தனது முதல் சம்பளம் குறித்து பகிர்ந்த அவர், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக முதல் சம்பளமாக 500 ரூபாய் பெற்றதாக தெரிவித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தற்போது தனது உழைப்பால் முன்னேறி ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நிலைக்கு உயர்ந்துள்ள சமந்தா, ஹைதராபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்களில் சொந்த வீடுகளையும், பல விலையுயர்ந்த கார்கள் கொண்டவராகவும் உள்ளார். அவர் தயாரித்து கதாநாயகியாக நடித்துள்ள ‘மா இன்டி பங்காரம்’ என்ற தெலுங்கு திரைப்படம் வருகிற மே 15ஆம் தேதி வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading