நடிகர் விஜய்யை நேரில் சந்தித்த நடிகை கனிகா… வைரல் கிளிக்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் வருகிற மே 4ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த சூழலில், தவெக தலைவர் விஜய்க்கு நடிகை கனிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் மற்றும் அரசியல் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்ட கனிகா, “அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இதுவரை அமையவில்லை என்றாலும், இன்று அவரை நேரில் பார்த்த அந்த நொடி எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

அவரது பாதுகாப்பு குழுவினர் அவரை அவசரமாக அழைத்துச் சென்றபோதும், அவர் ஒரு நிமிடம் நின்று எங்களை கவனித்து அன்பாக சில வார்த்தைகள் பேசினார். வெற்றிகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும். எங்களது ஆதரவு எப்போதும் உங்களுக்கே” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading