நானி தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த்!

நடிகர் நானி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ள அவர், தனது வால் போஸ்டர் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல தரமான திரைப்படங்களை தயாரித்துள்ளார். குறிப்பாக ஹிட் திரைப்படத்தின் மூன்று பாகங்களையும், கோர்ட் போன்ற உள்ளடக்க ரீதியாக பாராட்டப்பட்ட படங்களையும் தயாரித்து தயாரிப்பாளராகவும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது நானியின் வால் போஸ்டர் சினிமா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்புப் படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை தண்டோரா திரைப்படத்தை இயக்கிய முரளிகாந்த் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய கதைக்களத்துடன் உருவாக உள்ள இந்த படத்தின் முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ருக்மணி வசந்த் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதையை கேட்ட நடிகை ருக்மணி வசந்த், அந்த கதைக்களம் மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இந்த தகவல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading