தனுஷின் ‘கர’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு!

‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் ராஜா இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய படம் ‘கர’ . இந்த திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொண்டுள்ள நிலையில், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் செய்துள்ளார்.

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம், 1990களில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு வங்கிக் கொள்ளை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கிராமப்புற பின்னணியில் ஆக்சன் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, படக்குழுவினர் தீவிரமான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. இந்நிலையில், படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அதன் உருவாக்கக் காட்சிகளை உள்ளடக்கிய மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading