மணிகண்டன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் ‘மக்கள் காவலன்’

‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. நடிகராக மட்டுமல்லாமல், திரைக்கதை மற்றும் வசன எழுத்திலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் அவர்.

‘விக்ரம் வேதா’ படத்தில் வசனம் எழுதி கவனம் பெற்ற மணிகண்டன், ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இப்போது அவரது அடுத்த திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘மக்கள் காவலன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநரான சந்தோஷ் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் மணிகண்டன் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படம், “ஒரு சின்னம், ஒரு மனிதன், அதிகாரத்துக்கு எதிரான ஒரு போராட்டம்” என்ற வரியுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading