ஓய்வில்லாமல் பிஸியாக உழைக்கும் கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்குப் பிறகும் தனது திரைப்பணிகளில் எந்தக் குறையும் இல்லாமல் பிஸியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழில் ‘சத்யவான் சாவித்ரி’, ‘டோரதி’, மலையாளத்தில் ‘தோட்டம்’, இந்தியில் ‘ரப்தார்’, தெலுங்கில் ‘ரவுடி ஜனார்த்தனா’ மற்றும் அனில் ரவிப்புடி இயக்கும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து பேசிய கீர்த்தி, திருமணத்திற்கு முன்பைவிட இப்போது இன்னும் அதிகமாக வேலை செய்து வருவதாக கூறினார். ஒரே நாளில் இரண்டு தெலுங்கு படங்களுக்காக 20 மணி நேரம் தொடர்ந்து உழைத்த அனுபவமும் இருந்ததாகவும், கடந்த சில வாரங்களாக இடைவிடாத படப்பிடிப்புகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் அனில் ரவிப்புடி இயக்கும் மல்டிஸ்டார் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார். வெங்கடேஷ் மற்றும் கல்யாண் ராம் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் சமீபத்திய ஷூட்டிங் குண்டூர் காரம் ஹவுஸ் செட்டில் தொடங்கியுள்ளதாக கூறினார். மேலும், நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ படத்திற்காக சிறப்புப் பாடலில் நடனமாடியதாகவும், அதே சமயம் விஜய் தேவரகொண்டாவின் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்திற்கும் கால்சீட் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். சினிமாவில் எப்போதும் பிஸியாக இருப்பது தன்னுடைய ஆசீர்வாதம் என அவர் குறிப்பிட்டார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading