தெலுங்கு படத்தில் வெங்கடேஸ்வர சுவாமி வேடத்தில் ரவி மோகன்?

சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘பராசக்தி’ படத்திற்குப் பிறகு, ரவி மோகன் தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’ மற்றும் ராகவா லாரன்ஸுடன் ‘பென்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் தெலுங்கில் உருவாகும் புதிய படமான ‘வட்டி காசுல வாடா’வில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஞ்சு மனோஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படம் நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகிறது.

அதில் ரவி மோகன், வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது. வெளியான அறிவிப்பு வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், சுவாமிக்கும் கதாநாயகனுக்கும் இடையிலான காட்சிகள் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர். இந்தப் படத்தை தேஜ் உப்பலபதி இயக்குகிறார். ஏகே எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தத் திட்டம், ‘பிந்தாஸ்’ படத்திற்குப் பிறகு மஞ்சு மனோஜ் மற்றும் அந்த நிறுவனத்தின் மீண்டும் இணையும் படமாகவும் குறிப்பிடப்படுகிறது.

Add a Comment

Leave a Reply