கவனத்தை ஈர்க்கும் ‘கருப்பு’ படத்தின் “கருப்பா கூட வா” பாடல்!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இணைந்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த படம் வரும் மே மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது “கருப்பா கூட வா” என்ற புதிய பாடல் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை கவர்ந்த இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading