யு/ஏ சான்றிதழ் பெற்ற மம்முட்டி – மோகன்லால் நடித்த ‘பேட்ரியாட்’… ரன்னிங் டைம் 3 மணி நேரமா?

மலையாளத் திரைப்படத் துறையில் கடந்த சில வாரங்களாக சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் தொடர்ந்து வெளியாகி, எதிர்பாராத அளவில் பெரிய வசூலைப் பெற்று வருகின்றன. அந்த வரிசையில், அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘பேட்ரியாட்’ திரைப்படம் வரும் மே 1-ஆம் தேதி வெளியாக உள்ளது.

மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்த படம் சென்சார் அதிகாரிகளின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் இதற்கு யு/ஏ (16+) சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும், இப்படத்தின் ஓட்ட நேரம் 3 மணி நேரம் 25 நொடிகள் (3:00:25) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதுடன், ராணுவ மற்றும் அரசியல் பின்னணியில் கதை அமைந்துள்ளதால், இப்படத்தின் நீளம் இவ்வளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading