2062-ஆம் ஆண்டில்தான் தூங்குவேன் என நினைக்கிறேன்… நடிகை த்ரிஷாவின் பதிவு வைரல்!

நடிகை த்ரிஷா தற்போது இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற மே 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், த்ரிஷா சமீபத்தில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “ஒரு மணி நேரம் தூக்கம் குறைந்தால், அதை ஈடு செய்ய சுமார் நான்கு நாட்கள் ஆகும். அந்த கணக்கில் பார்த்தால், நான் சரியாக தூங்குவது 2062-ஆம் ஆண்டில்தான் நடக்கும் போல” என்று அவர் நகைச்சுவை கலந்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனுடன், அவரது பதிவைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. சிலர், த்ரிஷா மனஅழுத்தத்தில் இருப்பதாகவும், தூக்கமின்மை காரணமாக அவதிப்படுவதாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 42 வயதான த்ரிஷாவுக்கு இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில், அவ்வப்போது அவரது திருமணம் குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அதற்கு முன்பும், தன்னைப் பற்றிய திருமணச் செய்திகள் குறித்து அவர் நகைச்சுவையாக பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading