சமீபத்திய பேட்டியில் நடிகர் மாதவன், அரசியல் குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவாக பகிர்ந்துள்ளார். எந்த அரசியல் கட்சிக்கும் தாம் ஆதரவாளன் அல்ல என்றும், அரசியலுக்குள் வர வேண்டும் என்ற எண்ணமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அரசியல் என்பது மிகவும் பொறுப்பான விஷயம் எனக் கருதுவதாகவும், மக்கள் நலனுக்காக யார் நல்ல காரியம் செய்தாலும் அதை பாராட்ட வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் யாரை முதலமைச்சராகவோ பிரதமராகவோ தேர்ந்தெடுத்தாலும், ஜனநாயக முறையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குடிமகனின் கடமை எனவும் கூறினார்.
2025-ல் வெளியான ‘துரந்தர்’ மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் சேர்த்து உலகளவில் மிகப்பெரிய அளவில் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தப் படங்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் தன்னை ‘சங்கி’ என விமர்சித்ததையும், அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்ததையும் குறிப்பிட்ட மாதவன், இத்தகைய விமர்சனங்கள் தனது முடிவுகளை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். தன்னை காயப்படுத்தும் நோக்கத்திலான விமர்சனங்களின் பின்னணி என்ன என்பதை தான் கேட்க விரும்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
