சஞ்சய் தத் நடிப்பில் மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு உருவாகும் ‘கல்நாயக்’ படத்தின் இரண்டாவது பாகம்!

பாலிவுட் நடிகரான சஞ்சய் தத், சமீப ஆண்டுகளில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் மட்டும் அல்லாமல், பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். ஆனால் 1990களில் அவர் கதாநாயகனாக வலம்வந்த காலகட்டத்தில், அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘கல்நாயக்’. 1993 வெளியான இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வெற்றி படமாக அமைந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘கல்நாயக் ரிட்டன்ஸ்’ என்ற பெயரில் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. மேலும், ‘கல்நாயக் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் தலைப்பு டீசரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக, ‘கல்நாயக்’ திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநரான சுபாஷ் கை இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading