கேடி: தி டெவில் பட டிரெய்லர் நீக்கம்… திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் வெளியாகும் என கேவிஎன் நிறுவனம் அறிவிப்பு!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், கன்னடத்தில் ‘KD: The Devil’ என்ற படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு YouTube தளத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால், டிரைலர் வெளியான மறுநாளே அதனை வாபஸ் பெறுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் யூடியூபில் வெளியிடப்பட்ட ‘KD: The Devil’ திரைப்பட டிரைலரில், சான்றிதழ் வழங்கும் செயல்முறையின் போது கவனக்குறைவால் சில சான்றளிக்கப்படாத காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இதனால், அந்த டிரைலரை உடனடியாக நீக்கியுள்ளோம். மேலும், சான்றிதழ் விதிமுறைகளுக்கு இணங்க திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் மீண்டும் வெளியிட உள்ளோம். இந்த தவறுக்காக மனப்பூர்வமாக வருந்துகிறோம். எதிர்காலத்தில் அனைத்து சான்றிதழ் நடைமுறைகளையும் முழுமையாகப் பின்பற்ற உறுதியாக இருக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading