தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர், ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆர்யன்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ திரைப்படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில், மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘இரண்டு வானம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரையுலகில் வேகமாக முன்னேறி வரும் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் திபு நினன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடைப்பெற்றன . தற்போது இப்படத்தின் வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படத்தை கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த சூழலில், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘வெள்ளிச்சுடரே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மதராஜே வரிகளில், கபில் கபிலன் பாடியுள்ளார்.
