மீண்டும் தொடங்கியது வெற்றிமாறன்- சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை கலைபுலி எஸ். தாணு தயாரித்து வருகிறார். மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனுடன் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, நடிகரும் சிலம்பரசனின் தந்தையுமான டி. ராஜேந்தர் அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது அனைத்து பிரச்சினைகளும் சரியாகி படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற உள்ளதாகவும், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading