ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’… வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக தொடர்ந்து திகழ்ந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். தற்போது அவர், அறிமுக இயக்குநரான சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். சுபாஷ் கே ராஜ், பிரதீப் ரங்கநாதன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய திரைப்படத்தில் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது என்று திரையுலகில் பேசப்படுகிறது. மேலும், கே.ஜி.எப் திரைப்படத்தின் இசையமைப்பாளரான ரவி பசூர் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்நிலையில், அர்ஜுன் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இப்படத்தின் தலைப்பு ‘பிளாஸ்ட்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading