ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர் 2’ திரைப்படம் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படம் உலகளவில் ரூ.1,800 கோடி வசூலை எட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், உலகின் பல நாடுகளில் வெளியான இந்திய திரைப்படங்களின் வசூல் சாதனைகளை தொடர்ந்து இந்த படம் முறியடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, இங்கிலாந்தில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாக இருந்த ஷாருக்கானின் ‘பதான்’ படத்தின் சாதனையை ‘துரந்தர் 2’ தற்போது முறியடித்துள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவில் இந்த படம் 8.255 மில்லியன் டாலர்களை வசூலித்து, அந்நாட்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. அதேபோல், நியூசிலாந்தில் 1.295 பில்லியன் நியூசிலாந்து டாலர் வசூலித்து, அங்கும் ‘பதான்’ படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்த வகையில், ‘துரந்தர் 2’ உலகளவில் புதிய வசூல் சாதனைகளை உருவாக்கி வருகிறது.
